read the previous post here
அன்றைய மதராஸ் மேன்மையா?இன்றைய சென்னை செழுமையா?பட்டிமன்றமா? இல்லை!!இல்லைபகருவோம் உண்மையை
மந்தைகள் மேயும் புல்வெளி மந்தைவெளி-இன்றுசந்தைகள் நிறைந்த சந்துகளானதே!!
மயில்கள் ஆடி அழககூட்டிய மயிலாப்பூரிலோ-இன்றுமனிதத் தலை தவிர வேறில்லையே!!
பூந்தோட்டமாய் பூத்துக்குலுங்கிய நந்தனம்-இன்றுபூவுலகம் வியக்கும் நாகரீக முன்னேற்றம் கண்டதே!!
ஆதி அந்தமுமாகிய சிவனின் திரிசூலம்ஆதி அந்ததையும் இணைக்கும் விமான நிலையமானதே!!
அல்லிமலர் குளங்களால் நிறையப் பெற்ற திருஅல்லிக்கேணிஅடுக்குமாடி குடியிருப்புகளால் நிறைந்து போனதே!!
வண்டல்மண் படுகையான வண்டலூர் இன்றுவிலங்குகளின் சரணாலயமானதே!!
வில்வமரங்களால் சூழப்பட்ட வில்லிவாக்கம் இன்றுவீட்டுமனை விரிவாக்க திட்டத்தால் விரிந்து பரந்து போனதே!!
இன்னும் சொல்லாம் இப்படியான மாற்றங்களை,மாற்றங்களே மாறும்!இதுதான் நியதி!!
நீரோட்டத்தின் பாதையிலே பயணிப்போம்.
மாற்றங்களை மனகட்டுப்பாட்டுடன் ஏற்போம்.மனமொத்த கருத்துடன் வாழ்வோம்.

image: google
For those who do not read Tamil, Here is the exact translation in English!
Andraiya Madras menmaiya?Indraiya chennai chezhumaiya?Pattimandrama? Illai IlaaiPagaruvom unmaiyai.
Mandhaigal meyum pulveli Mandaiveli-Indrusandhaigal niraindha sandhaiyanathe!!
Mayilgal Aadi azhakoottiya Mayilapoorilo-IndruManitha thalai thavira verillaiye!!
Poonthottamai Pooththukulungiya Nandhanam- IndruPoovulagu viyakkum Nagariga Munnetram kandathe!!
Aadhi andhamumagiya sivanin idamana Thirisulam IndruAadhi andhathaiyum inaikkum vimananilaiyamanathe!!
Allimalar kulangalal niraiyappetra Thiru allikeni-IndruAdukkumadi kudiyiruppukalal niraindhu ponathe!!
Vandalman paduhaiyana Vandalur-IndruVilangukalin saranalayamanathe!!
Vilvamarangalal soolappatta villivakkam-IndruVeettumanaivirivakka thittaththal virindhu parandhu ponoathe!!
Innum sollalam ippadiyana matrangalaiMatrangale marum! Idhudhan niyathi!
Neerottathin pathaiyile payanippom
Matrangalai manakattuppattudan erpom.
Manmotha karuthudan vazhvom.
I would really like to thank my mom (Gayathri) helping me to place the correct tamil words in the sentences and to write the poem!!
I pass the baton to ASHA SUNIL-SAISHYAM :) and looking forward to her thoughts on the same.