11th Dec ~மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரை நினைவு கூறும் இந்நாளில், நீங்கள் இந்த வரிகளை கேட்டதுண்டா ? அற்புத கவி, தனது காலத்துக்கு முன்பே வருவன குறித்து தீர ஆலோசித்த தீர்க்கதரிசி மகா ஞானி பாரதியார் தனது சுய சரிதையில் அன்றைய ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறை பற்றி மனம் நொந்து கூறிய வார்த்தைகள் இவை.
Thiruvallikkeni ~ is the famed Divaydesam of Sri Parthasarathi – also is the place e where Mahakavi lived and breathed nationalism – that was at Thulasinga Perumal Kovil Street ~ opp. the entrance of Sri Azhagiya Singar sannathi on the western side of the temple.
Dec 11 – is to be eternally remembered for that iconoclastic freedom fighter - born in a small village called Ettayapuram on Dec 11' 1882 ~ the man who breathed freedom struggle. He had a troubled existence, constantly chased by the British Govt, was on the run – still his indomitable will and his concerted action mobilized masses, making them aware of the need for freedom in the Southern India.
சுப்ரமணிய பாரதியார் ~ ஒரு உன்னத பிறவி. கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி - தன் காலத்துக்கு மிகவும் பல்லாண்டுகள் பிறகு நடக்க வல்லவை பற்றி கூர் நோக்குடன் சிந்தித்தவர். குறைந்த காலமே வாழ்ந்தாலும் சாதனைகள் செய்தவர். இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர்“சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்;எங்கள் பாரததேசமென்று தோள் கொட்டுவோம்.
என தேசத்தின் பெருமை இயம்பி அதே நேரத்தில் புது சிந்தனையாக, தன்னைம்பிக்கை ஊட்டும் புது ஆத்திச்சூடியையும் தந்தவர் நம் திருவல்லிக்கேணி முண்டாசு கவிஞர். பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்க்ருதம்,, வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார். இதோ புது ஆத்திச்சூடியில் இருந்து :
அச்சம் தவிர் ; ஆண்மை தவறேல்; இளைத்தல் இகழ்ச்சி; ஈகை திறன்; உடலினை உறுதிசெய்; எண்ணுவது உயர்வு; ஏறுபோல் நட' ஐம்பொறி ஆட்சிக்கொள்' ; ஒற்றுமை வலிமையாம். .. .. ..
Mahakavi Subramanya Barathi…. the greatest of modern poets acclaimed that ‘writing poems is his profession’ – but lived the life of fighting for independence. He was proficient in Sanskrit, Telugu, English, Hindi, Bengali and French. He wrote with felicity in English. The poet was closely associated with many Swadeshi leaders in the south, including V.O. Chidambaram Pillai. When the British Raj clamped down on the Swadeshis, he took refuge in Pondicherry in 1908; Aurobindo and V.V.S. Iyer also sought shelter there later. In 1920, Bharati returned to Madras to rejoin Swadesamitran. He met Mahatma Gandhi and wrote an oft-quoted poem in praise of non-violence. But his last years were tragic and he died in obscurity in September 1921.
During his lifetime and after his death, his works were banned by the British Govt – following which Madras Presidency Police too issued orders confiscating his works. Opposing this in the house of Madras legislature in 1928 there was a debate in which many including Theerar Sathyamurthi participated. However, it was a rare honor bestowed on him, as immediately after Indian Independence in 1949, his works were nationalized by the State Government; he is perhaps the First Writer to be honoured thus which eluded even Gandhi and Rabindranath Tagore.
On this day, we remember the man with twirled moustache who dreamt and ignited the Nation towards Independence.
Jai Hind ~ remembering Mahakavi Subramanya Barathi.
~ S. Sampathkumar